தமிழ் புத்தாண்டு

Original Filename: Tamil_New_Year.jpg (view)

Original Size: 8.5 KB

Original Image Type: image/pjpeg

தமிழ் புத்தாண்டு.

Caption

உலகிலுள்ள தமிழர்கள் சித்திரை முதலாம் நாளையே தமது புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.  சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதத்தை,  முதற் புள்ளியாய், ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர்.  பன்னிரண்டு ராசியால் பன்னிரண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம் மீது சூரியன் நேராக பிரகாசிக்கும் போது  மேட ராசியில் இருப்பான்.  இதனால் மேடம் முதல் ராசியானது.  இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை,  அதனால் சித்திரை முதல் மாதமானது. 

புத்தாண்டு பிறந்த புண்ணிய காலத்தில் இந்துக்கள் மருத்து நீர் தேய்த்து நீராடுவர்.  வெண்ணிற பட்டாடை அல்லது பொற்கரை அமைந்த பருத்தி  ஆடையாயினும் தரித்து ஆபரணங்கள் அணிந்து சந்தனம் பூசி,  பூக்கள் சூடி,  தத்தம் வீடுகளில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைப்பர்.  தான தருமம் செய்து குரு, தாய், தந்தை, பெரியோர் முதலியவர்களை வணங்கி ஆசி பெறுவர். 

எல்லோரும் கோவில் சென்று இறை வழிபாடு செய்வர்.  பிறக்கும் ஆண்டு எல்லா நலன்களும் நிறைந்திருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுவர்.  சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வார்கள்.

Discuss This Topic

There are 0 comments in this discussion.

join this discussion

தமிழ் புத்தாண்டு


City:Hamilton
Creative Commons Attribution-Noncommercial 3.0 New Zealand License
தமிழ் புத்தாண்டு by Kanchana is licensed under a Creative Commons Attribution-Noncommercial 3.0 New Zealand License